search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    திருப்பூரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பூரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பாப்பாத்தி . இவர் சம்பவதன்று தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் போலீஸ்காரர் என்றும், போலீஸ் அதிகாரி அருகே நிற்பதாகவும் அவர் உங்களை அழைத்து வர சொன்னார் என்றும் கூறி பாப்பாத்தியை தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார்.

    அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்ற மற்றொருவர், பாப்பாத்தியிடம் விசாரணை நடத்துவது போல், பெயர், வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். பின்னர் அந்த விவரங்களை ஒரு நோட்டில் குறிப்பெடுத்துள்ளார். அப்போது, அந்த ஆசாமி, ‘இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. இவ்வளவு நகையை அணிந்து கொண்டு சென்றால் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே நகையை என்னிடம் கழற்றி கொடுங்கள். அதை பாதுகாப்பாக காகித பொட்டலத்துக்குள் வைத்து தருகிறேன்’ என்று பாப்பாத்தியிடம் கூறியுள்ளார்.

    இதை நம்பிய பாப்பாத்தியும் தான் அணிந்திருந்த7½ பவுன் சங்கிலியை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் ஒரு வெள்ளை காகிதத்தில் நகையை வைத்து மடிப்பதை போல், ஒரு பொட்டலத்தை பாப்பாத்தியிடம் கொடுத்து அதை வீட்டில் போய் திறந்து பார்க்குமாறு கூறி அனுப்பிவைத்தார். அந்த நபர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி சென்று விட்டனர். பாப்பாத்தியும் அந்த நபர் கொடுத்த வெள்ளை காகித பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் போய் திறந்து பார்த்தார். ஆனால் பொட்டலத்துக்குள் கற்கள் மட்டுமே இருந்தது. தனது தங்க நகை இல்லை. இதனால் பாப்பாத்தி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாப்பாத்தி புகார் அளித்தார். புகாரை பெற்ற குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக நெசவாளர் காலனிக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் நெசவாளர் காலனி பகுதியில் பனியன் நிறுவனங்களுக்கு முன்பு பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் புகைப் படத்தை பெற்று மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×