என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதிகள் பெயரில் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

சென்னை:
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. சில தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து வருகிறது. பொருளாதாரத்தை குறி வைத்து நாசவேலையில் ஈடுபடும் செயல்களில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் ரெயில் நிலையங்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர். ஐ.எஸ். இயக்கத்தின் பேரில் இ.மெயில் மூலம் இந்த மிரட்டல் இந்தியன் ரெயில்வேக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் ஜூன் மாதம் முதல் தொடர் குண்டுகள் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பிற தீவிரவாத அமைப்பினருடன், ஐ.எஸ். இயக்கத்தினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் உளவுதுறை எச்சரித்து உள்ளது.
தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து இந்திய ரெயில்வே தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து ரெயில்வே கோட்ட அலுவலகங்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து ரெயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய நபர் அல்லது பொருட்கள் பற்றி தெரிந்தால் ஆர்.பி.எப். போலீசுக்கு பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலும் அனைத்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளது.
ரெயில்வே ஊழியர்கள் பணியில் இருக்கும்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களது உடைமைகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
