என் மலர்
செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்
திருமயம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை:
ராமநாதபுரம் அரண்மறணை வீதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 26).வெல்டராக வேலைபார்த்து வருகிறார்.
இவர் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரெயில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெல் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அரவிந்த்குமார் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வர தொடங்கியது.
இருப்பினும் அரவிந்த் குமார் எழுந்து சென்று அருகில் உள்ள திருமயம் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்தவர்களின் உதவியுடன் திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே எஸ்.ஐ. ராஜராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளனூர் அருகே சிப்காட் வளைவில் ரெயில் சென்ற போது ஒருவர் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக முட்புதரில் சிக்கி கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இது போன்று ரெயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள் தவறி விழும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, படியில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்வதன் விழிப்புணர்வை பயணிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி அரவிந்த்குமாரை அவரை சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்க மாவட்ட தலைவர் மாருதிமோகன்ராஜ் உட்பட பலர் நேரில் பார்த்து போதிய மருத்துவ உதவிகள் வழங்குமாறு டாக்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story