என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் பாத்திர வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
- பட்டப்பகலில் முகமூடி கொள்ளையன் கைவரிசை
- வேலைக்காரியை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றான்
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவர் அந்த பகுதியில் பாத்திரக்கடை வைத்து உள்ளார். பாலகிருஷ்ணனுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் திருப்பூரில் உள்ளார். இளைய மகன் மனைவி மோகனப்பிரியா.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் மகனுடன் வெளியே புறப்பட்டு சென்றார். மருமகள் மோகனப்பிரியா வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். வேலைக்கார பெண் சரஸ்வதி வீட்டின் பின்புறமாக துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒருவன் நைசாக வீட்டுக்குள் புகுந்தான். பீரோவில் இருந்த 20 சவரன் நகையை மூட்டை கட்டி எடுத்து கொண்டான். அதன்பிறகு அவன் வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றான்.
இந்த நிலையில் முகமூடி மனிதனை சரஸ்வதி பார்த்து விட்டார். எனவே அவர் திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதனால் அந்த வாலிபர் சரஸ்வதியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றார்.
இந்த நிலையில்பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வேலைக்காரி மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் பட்டப்பகலில் முகமூடி மனிதன் வீடு புகுந்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்று சம்பவம், அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், கருமத்தம்பட்டி பகுதியில்நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே அங்கு வந்த ஒரு நபர் தான் மேற்கண்ட துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கவேண்டும்.
எனவே போலீசார் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் கருமத்தம்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.






