என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தூத்துக்குடியில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற 2 ரவுடிகள் கைது
- பல்வேறு வழக்குகள் தொடர்புடைய சந்தனராஜ் என்ற சாண்டல் , இந்திரா நகர் செல்வம் ஆகிய இருவரது நடவடிக்கைகளையும் போலீசார் விசாரித்தனர்.
- போலீஸ் விசாரணையால் ஆத்திரமடைந்த சந்தனராஜ் மற்றும் செல்வம் 2 பேரும் போலீசாரை அவதூறாக பேசி அரிவாளல் வெட்ட முயன்றதாக தெரிகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகில் அரசன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வெட்ட முயற்சி
அப்போது பெரியகடை தெரு வழியாக செல்லும் போது அந்த பகுதியில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய சந்தனராஜ் என்ற சாண்டல் (வயது42), இந்திரா நகர் செல்வம் (47) ஆகிய இருவரது நடவடிக்கைகளையும் போலீசார் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையால் ஆத்திரமடைந்த சந்தனராஜ் மற்றும் செல்வம் 2 பேரும் போலீசாரை அவதூறாக பேசி அரிவாளல் வெட்ட முயன்றதாக தெரிகிறது.
2 பேர் கைது
இதில் சுதாகரித்து கொண்ட போலீசார், உடனடியாக அவர்களிடம் இருந்த அரிவாளை பறித்து 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப் பட்டவர்கள் மீது தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்கள் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரவுடி பட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.