search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    • கடந்த மாதம் 21-ந்தேதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் செல்வராஜ் என்ற செல்லக்குட்டி மற்றும் சின்னதம்பி ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்தனர்.
    • கலெக்டர் லட்சுமிபதி, 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம், உழவர் சந்தை அருகில் கடந்த மாதம் 21-ந் தேதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பாரதிநகரை சேர்ந்த பெருமாள் மகன்களான செல்வராஜ் என்ற செல்லக்குட்டி (வயது28) மற்றும் சின்னதம்பி (26) ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இவ்வழக்கில் செல்லக்குட்டி மற்றும் சின்னதம்பி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் எஸ்.பி. பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் கலெக்டர் லட்சுமிபதி, 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 156 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×