என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுனில் பேக்கரி கடை உரிமையாளரை கத்தியால் குத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    நெல்லை டவுனில் பேக்கரி கடை உரிமையாளரை கத்தியால் குத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்வகுமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.
    • திருச்செந்தூர் பகுதியில் 2 பேரும் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). இவர் அதே தெருவில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த கடையில் தங்கராஜ் மகன் செல்வகுமார் இருந்தபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்வகுமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் டவுன் அடைக்கல மாதா தெருவை சேர்ந்த முத்துமாரி (வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் சேர்ந்து செல்வக்குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அவர்கள் 2 பேரும் திருச்செந்தூர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து நெல்லைக்கு கொண்டு வந்தனர். அதில் 17 வயது சிறுவனை சிறுவர் கூர்நோ க்கு இல்லத்திலும், முத்து மாரியை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    Next Story
    ×