என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
    X

    வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

    • காட்பாடி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இந்த விபத்தில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர். அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள பழைய கரியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 55 ) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சானூரப்பட்டி அருகே கரியப்பட்டி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் வேலூர் மாவட்டம் காட்பாடி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயபாலன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபாலன் இறந்தார்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரியை சேர்ந்தவர் சந்திரசேகர் ( 43).

    இவர் நேற்று மாலை உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    வல்லம் - ஆலக்குடி சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையின் வளைவில் வைக்கப்பட்டிருந்த எதிரொளிப்பான் போர்டு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரசேகர் இறந்துவிட்டார்.

    வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த இரண்டு விபத்துக்கள் குறித்தும் செங்கிப்பட்டி மற்றும் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×