என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் ஜாமீனில் வெளிவந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 2 பேர் கைது
    X

    நெல்லை மாவட்டத்தில் ஜாமீனில் வெளிவந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 2 பேர் கைது

    • முத்துகிருஷ்ணன் கடந்த 2½ மாதமாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
    • கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முப்பிடாதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

    நெல்லை:

    வள்ளியூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது 42). இவர் கடந்த 2015-ம் ஆண்டு பணகுடி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நெல்லை நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் முத்துகிருஷ்ணனை பணகுடி போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.களக்காடு அக்ரஹார தெருவை சேர்ந்த முப்பிடாதி (23) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 4½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், எதிரிக்கு நெல்லை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து முப்பிடாதியை சிவந்திபட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    Next Story
    ×