என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    போத்தனூரில் கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது
    X

    போத்தனூரில் கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போத்தனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போத்தனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மதுக்கரை-சுந்தராபுரம் ரோட்டில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்கள் இடுப்பில் கத்தியை மறைத்து வைத்திருந்தனர்.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் கரும்புக்கடையை சேர்ந்த சேக் முகமது, குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த நிஷாத் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவர்கள் எதற்காக கத்தியுடன் சுற்றி திரிந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×