என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் கொள்ளை
- விசைத்தறி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் எடுத்து வந்தார்
- கருமத்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை- வாகன தணிக்கை சோதனை
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது55). இவர் அந்த பகுதியில் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார்.
இவர் தனது விசைத்தறி கூடத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, நேற்று தனது மோட்டார் சைக்கி ளில் கருமத்தம்பட்டியில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்றார்.பின்னர் அங்கு ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு, தனது வாகனத்தின் சீட்டுக்கு அடியில் உள்ள பாக்சில் வைத்து விட்டு விசைத்தறி கூடத்தி ற்கு புறப்பட்டார்.
வரும் வழியில் கருமத்தம்பட்டி-சோமனூர் ரோட்டில் உள்ள காபி கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பெட்டி திறந்திருந்தது. மேலும் உள்ளே வைத்திருந்த பணமும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளுடன் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதனை அடுத்து கருமத்தம்பட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடித்து சிறை யில் அடைத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வைத்த பணம் கொள்ளை போய் இருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






