search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
    X

    புதிய வகுப்பறை கட்டும் பணியினை மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்து செல்வன் துவக்கி வைத்தார்.

    2 பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

    • வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • விழாவிற்கு பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் வீரமாங்குடி ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு, குழந்தை நேய பள்ளி உட்கட்ட அமைப்பு மேம்பாடு, திட்டத்தின் கீழ் வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தார். பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம் வரவேற்று பேசினார்.

    விழவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.

    நிகழ்சியில் பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகன்யா ஆகிய கலந்து கொண்டனர்.

    முடிவில் வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தவமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×