search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி பேராசிரியரை காரில் கடத்தி தாக்கிய 2 பேர் கைது
    X

    கல்லூரி பேராசிரியரை காரில் கடத்தி தாக்கிய 2 பேர் கைது

    • மறுநாள் மாலை காயங்களுடன் அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
    • முன்விரோதம் காரணமாக சந்தோஷ் தனது நண்பருடன் சேர்ந்து தாக்கியது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் உல. பாலசுப்பிரமணியன் (வயது 47). இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மனைவி வளர்மதி.கடந்த 14-ந்தேதி பாலசுப்பிரமணியன் தனது காரில் வழக்கம் போல் பணிக்கு சென்றார். மாலை அவர் வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் 15-ந் தேதி மாலை காயங்களுடன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது யாரோ கடத்திச் சென்று தன்னை தாக்கியதாக தெரிவித்து விட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்துள்ளார்.

    தொடர்ந்து வளர்மதி தனது கணவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். 17-ந் தேதி கண்விழித்த பாலசுப்பிரமணியனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளார்.

    பின்னர் இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் வளர்மதி புகார் செய்தார். அதில் தனது கணவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மகன் சந்தோஷ் (25) கடத்திச் சென்று தாக்கி உள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.

    புகாரின் பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக சந்தோஷ் தனது நண்பர் பார்த்தி (24) என்பவருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியனை தாக்கியது தெரியவந்தது.

    இதையடுத்து சந்தோஷ் மற்றும் பார்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×