என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு  அனைத்து கிராம ஊராட்சிகளிலும்  1-ந்தேதி கிராம சபை கூட்டம் - தென்காசி கலெக்டர் அறிவிப்பு
    X

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1-ந்தேதி கிராம சபை கூட்டம் - தென்காசி கலெக்டர் அறிவிப்பு

    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது
    • நவம்பர் 1-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இக்கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம சபை ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம்,கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வரி, வீட்டு வரி-சொத்து வரி செலுத்துதல்,

    மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்குதல், 2021-22 மற்றும் 2022 -23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின் அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்த அறிக்கை,மக்கள் நிலை ஆய்வு பட்டியல், விடுபட்ட புதிய இலக்கு, மக்கள் குடும்பங்களை சேர்த்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×