என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்காநல்லூர் அருகே வெளியூருக்கு சென்ற பெண் வீட்டில் 10 பவுன் நகைகள் கொள்ளை
- திண்டுக்கல்லுக்கு தாயுடன் சென்றிருந்தபோது சம்பவம்
- சிங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்
கோவை,
கோவை நீலிகோணம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 54). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் திண்டுக்கல் சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மூக்குத்தி, மோதிரம் உள்பட 10 பவுன் தங்க நகைகள், ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
நேற்று வீட்டிற்கு திரும்பிய லட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார் .
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு வெளியூக்கு சென்ற பெண் வீட்டில் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






