search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று வரை 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு
    X

    சுந்தரபாண்டியபுரம் மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று வரை 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

    • மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது
    • விடுமுறை நாளான நாளை ஞாயிற்றுக்கிழமையும் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர் வோர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தர விட்டுள்ளது.

    சிறப்பு முகாம்

    இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் சிரமமின்றி ஆதார் எண்ணை இணைக்கும் பொருட்டு மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு அங்கு மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் இப்பணிகள் கடந்த சில நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 58 ஆயிரத்து 934 மின் இணைப்புகள் உள்ளது. இதில் இன்று காலை 11 மணி வரை 1 லட்சத்து 86 ஆயிரத்து 217 வாடிக்கையாளர்கள் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இப்பணிகளை மேலும் விரைவு படுத்தும் வகையில் 2-ம் சனிக்கிழமையான இன்றும் விடுமுறை நாளான நாளை ஞாயிற்றுக்கிழமையும் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×