என் மலர்
வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840
22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-06-2025- ஒரு கிராம் ரூ.120
25-06-2025- ஒரு கிராம் ரூ.119
24-06-2025- ஒரு கிராம் ரூ.120
23-06-2025- ஒரு கிராம் ரூ.120
22-06-2025- ஒரு கிராம் ரூ.120






