என் மலர்
வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்
- தங்கம் விலை சீரான இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டி பிடித்து வருகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், சவரன் ரூ.92 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது. இந்தநிலையில் நேற்று ரூ.245 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 825-க்கும், ரூ.1,960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை சீரான இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டி பிடித்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் தங்கம் விலை முதல்முறையாக ரூ.94 ஆயிரத்தை தாண்டி வரலாறு படைத்து இருக்கிறது.
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.197-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.206-க்கும், ரூ.9 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனையாகியது. வெள்ளி முதல்முறையாக கிலோவுக்கு ரூ.2 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 207 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600
13-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,640
12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-10-2025- ஒரு கிராம் ரூ.206
13-10-2025- ஒரு கிராம் ரூ.197
12-10-2025- ஒரு கிராம் ரூ.190
11-10-2025- ஒரு கிராம் ரூ.190
10-10-2025- ஒரு கிராம் ரூ.184






