என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    இன்றைய தங்கம் விலை நிலவரம்...
    X

    இன்றைய தங்கம் விலை நிலவரம்...

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலையில் ஆபரணத்தங்கத்தின் மீதான இறக்குவதி வரி குறைக்கப்பட்டதால் சவரன் ரூ.51,000-க்கு கீழ் சென்ற தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சவரனுக்கு ரூ15,000 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,440-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு சவரன் ரூ.60,440-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,555-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    23-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,200

    22-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,200

    21-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600

    20-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    23-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    22-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    21-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    20-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    19-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    Next Story
    ×