என் மலர்
வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்
- கடந்த மாதம் 10-ந்தேதி வரை ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அது பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இதனால் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதனைத் தொடர்ந்து விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே பயணித்தது.
இதில் பெரும்பாலான நாட்கள் விலை அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் மீண்டும் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தையும், ரூ.73 ஆயிரத்தையும் தாண்டியது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360 அதிரடியாக சரிந்து, ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. மறுநாள் விலை அதிகரித்து காணப்பட்டாலும், நேற்று முன்தினமும், நேற்றும் விலை குறைந்து இருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவர ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1,560-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவர ரூ.68 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த மாதம் 10-ந்தேதி வரை ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. அந்தவகையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.4,160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,720-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது. இன்று விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108 க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880
14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440
13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840
12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000
11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-05-2025- ஒரு கிராம் ரூ.108
14-05-2025- ஒரு கிராம் ரூ.109
13-05-2025- ஒரு கிராம் ரூ.109
12-05-2025- ஒரு கிராம் ரூ.110
11-05-2025- ஒரு கிராம் ரூ.110






