என் மலர்
வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?
- நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 195 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,610-க்கும் சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.68,880-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தற்போது விலை குறைந்து விற்பனையாவது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440
13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840
12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000
11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-05-2025- ஒரு கிராம் ரூ.109
13-05-2025- ஒரு கிராம் ரூ.109
12-05-2025- ஒரு கிராம் ரூ.110
11-05-2025- ஒரு கிராம் ரூ.110
10-05-2025- ஒரு கிராம் ரூ.110






