என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    GOLD PRICE TODAY : ஒரேயடியாக உயர்ந்த வெள்ளி விலை... இன்றைய தங்கம் விலை நிலவரம்
    X

    GOLD PRICE TODAY : ஒரேயடியாக உயர்ந்த வெள்ளி விலை... இன்றைய தங்கம் விலை நிலவரம்

    • நேற்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்தும் ஒரு சவரன் ரூ.72,600-க்கு விற்பனையானது.
    • இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்தும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்தும், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்தும் ஒரு சவரன் ரூ.72,600-க்கு விற்பனையானது.



    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,140 ரூபாய்க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

    10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

    09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,000

    08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-07-2025- ஒரு கிராம் ரூ.121

    10-07-2025- ஒரு கிராம் ரூ.120

    09-07-2025- ஒரு கிராம் ரூ.120

    08-07-2025- ஒரு கிராம் ரூ.120

    07-07-2025- ஒரு கிராம் ரூ.120

    Next Story
    ×