என் மலர்

  செய்திகள்

  இந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை
  X

  இந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை இதுவரை 20 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். இந்தியாவில் வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகளில் இத்தகைய மைல்கல் சாதனையை டி.வி.எஸ். எட்டியுள்ளது.
  புதுடெல்லி:

  டி.வி.எஸ். ஜூப்பிட்டர் இந்தியாவில் புதிய மைல்கல் விற்பனையை எட்டியுள்ளது. இந்தியாவில் வெளியான நான்கே ஆண்டுகளில் 20 லட்சம் பேர் டி.வி.எஸ். ஜூப்பிட்டரை வாங்கியுள்ளனர். ஹோன்டா ஆக்டிவா மாடலுக்கு அடுத்த இடத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக டி.வி.எஸ். ஜூப்பிட்டர் இருக்கிறது.

  இந்தியாவில் பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி இருக்கிறது. டி.வி.எஸ். சமீபத்தில் அறிமுகம் செய்த அபாச்சி, RTR, விக்டர் மற்றும் ஜூப்பிட்டர் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் வெளியான நான்கே ஆண்டுகளில் 20 லட்சம் ஜூப்பட்டர்களை விற்றுள்ளதாக டி.வி.எஸ். தெரிவித்துள்ளது.

  2013-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டி.வி.எஸ். ஜூப்பிட்டர் அதிவேகமாக 10 லட்சம் யுனி்ட்களை விற்பனை செய்த ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றது. வெளியான முப்பது மாதங்களில் 10 லட்சம் யுனிட்களை விற்பனையானது. போட்டி நிறுவன வாகனங்களுடன் ஒப்பிடும் போது பல்வேறு அம்சங்களை முதலில் வழங்கிய பெருமையை ஜூப்பிட்டர் பெற்றிருந்தது.    டி.வி.எஸ். ஜூப்பிட்டர் மாடல் 110 சிசி இன்ஜின் கொண்டு 7.99PS மற்றும் 8Nm செயல்திறன் கொண்டுள்ளது. ஸ்கூட்டர் மாடல்களில் அதிக மைலேஜ் வழங்கும் மாடலாக விளஙக்கும் ஜூப்பிட்டர் லிட்டருக்கு 62 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

  இத்துடன் டி.வி.எஸ். காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் மூலம் இகோ மோட் மற்றும் பவர் மோட் கொண்டுள்ளது. இத்துடன் சின்க் பிரேக்கிங் சிஸ்டம், எக்ஸ்டெர்னல் ஃபியூயல் ஃபில்லர் கேப், பாஸ் லைட் ஸ்விட்ச், மொபைல் சார்ஜர் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

  டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பேஸ், ZX, டிஸ்க் பிரேக் கொண்ட ZX என மூன்று மாடல்களில் கிடைக்கிறது. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் கிளாசிக் எடிஷன் மாடல் ஒன்றை வெளியிட்டது. இந்த மாடலில் யு.எஸ்.பி. சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. ராயல் வைன், மேட் ப்ளூ, ஸ்டேலியன் பிரவுன், டைட்டானியம் கிரே, மிட்நைட் பிளாக், வொல்கானோ ரெட், பிரிஸ்டைன் வைட், ஜேட் கிரீன் மற்றும் மிஸ்டிக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
  Next Story
  ×