என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் பாதுகாப்புடன் உருவாகும் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்
    X

    கூடுதல் பாதுகாப்புடன் உருவாகும் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்

    மாருதி சுசுகியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அதிக ஏர்பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #maruti #Ciaz
    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய சியாஸ் மாடலில் குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்ஸ் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹூன்டாய் வெர்னா மற்றும் ஹோன்டா சிட்டி டாப்-என்ட் வேரியன்ட்களில் ஆறு ஏர்பேக்ஸ் வழங்கப்படும் நிலையில், டொயோட்டா யாரிஸ் மாடலில் மட்டுமே ஏழு ஏர்பேக்ஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய சியாஸ் அதிக பாதுகாப்பு வசதி கொண்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது மாருதி நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு கொண்ட மாடலாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.


    இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாருதி சியாஸ் கார் ஆகஸ்டு 20-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த கார் ஏற்கனவே விற்பனையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாருதி சுசுகியின் நெக்சா விற்பனையாளர்கள் மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலின் முன்பதிவுகளை துவங்கியுள்ளன.

    சமீபத்தில் புதிய சியாஸ் மாடலின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டது. புதிய டீசர் படங்களில் மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதிய எல்.இ.டி. லைட் தற்சமயம் சந்தைக்கு ஏற்ற வகையில் அழகாக காட்சியளிக்கிறது.

    வடிவமைப்பை பொருத்த வரை சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் மேம்படுத்தப்பட்ட கிரில், மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட்கள், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பம்ப்பர் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடல் அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #maruti #Ciaz
    Next Story
    ×