search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா 45X ப்ரோடோடைப்
    X

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா 45X ப்ரோடோடைப்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 45X கான்செப்ட் ஹேட்ச்பேக் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதில் கார் இன்டீரியர் விவரங்கள் தெரியவந்துள்ளது. #tatamotors


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45X கான்செப்ட் ஹேட்ச்பேக் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்தது. அதன்பின் 45X ப்ரோடோடைப் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இம்முறை ஆட்டோகார் வெளியிட்டிருக்கும் ஸ்பை படங்களில் காரின் இன்டீரியர் அம்சங்கள் தெரியவந்துள்ளன.

    சமீபத்தில் வெளியாகியிருக்கும் படங்களில் டாடா 45X உள்புறத்தில் ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டேஷ்போர்டு விவரங்கள் தெரிகிறது. இத்துடன் பெரிய மிதக்கும் படியான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இது டாடா நெக்சன் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.



    டாடா 45X மாடலின் இன்ஸ்ருமென்ட் கிளஸ்டரில் அனலாக் டையல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ஏ.சி. வென்ட்கள் டேஷ்போர்டின் இருபுறம் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது. இதன் சென்டர் கன்சோலில் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் மற்றும் டேஷ்போர்டு முழுக்க கருப்பு நிற தீம் செய்யப்பட்டுள்ளது.

    வெளிப்புறத்தில் டாடா 45X மாடல் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இம்பேக்ட் டிசைன் 2.0-வை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஸ்போர்ட் தோற்றத்தில் பெரிய சக்கரங்கள் மற்றும் வீல் ஆர்ச்களை கொண்டிருக்கும்.

    டாடா கான்செப்ட் ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின்களில் நெக்சனை விட சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: Autocarindia
    Next Story
    ×