என் மலர்
செய்திகள்

ராயல் என்ஃபீல்டு புதிய 750சிசி மாடலின் டீசர் வெளியானது
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் மாடல் பைக்கின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சர்வதேச சந்தைகளில் வெளியிட ஏதுவாக புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை தயாரித்து வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் புதிய ராயல் என்ஃபீல்டு பைக் இன்டர்செப்டார் என அழைக்கப்படலாம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரியான சித் லால், தற்சமயம் ராயல் என்ஃபீல்டு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளார். டீசர் வீடியோவில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் இடம்பெற்றிக்கின்றன, எனினும் இவை பறவையின் பார்வில் படமாக்கப்பட்டுள்ளதால் மோட்டார்சைக்கிள் தெளிவாக காணப்படவில்லை.
டீசர் வீடியோவில் மோட்டார்சைக்கிளின் பாரலெல்-டுவின் எக்சாஸ்ட் நோட் சத்தம் பின்னணியில் ஒலிக்கிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 750சிசி மோட்டார்சைக்கிள் என்றும் இதில் புத்தம் புதிய 750சிசி ஏர்-கூல்டு பாரலெல் டுவின் சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அவ்வாறு கசிந்த இரண்டு மாடல்களில் மற்றொரு மாடல் ராயல் என்ஃபீ்ல்டு கான்டினென்ட்டல் GT என்றும் இது டிரையம்ப் போன்வில் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. GT மாடல் ஏற்கனவே இருக்கும் கான்டினென்ட்டல் GT535 மாடலின் ஃபிரேம் கொண்டுள்ளது.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் GT750 விற்பனைக்கு அறிவிக்கப்படும் போது பாதுகாப்பு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம் என்பதால் இந்த மாடலில் ABS அம்சம் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகியுள்ள ஸ்பை புகைப்படங்களில் செயின் மற்றும் ஸ்பிராகெட் உள்ளிட்டவை வாகனத்தின் இடது புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

Next Story