search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலைத்தளத்தில் வெளியான ஸ்டெல்த் பிளாக் நிறம் கொண்ட கே.டி.எம். டியூக் 390
    X

    வலைத்தளத்தில் வெளியான ஸ்டெல்த் பிளாக் நிறம் கொண்ட கே.டி.எம். டியூக் 390

    கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 390 பைக் புதிய நிறம் கொண்ட மாடல் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. புதிய நிறம் கொண்ட டியூக் 390 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கே.டி.எம். டியூக் 390 ஸ்டெல்த் பிளாக் கொண்ட மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் 2013-ம் ஆண்டு அறிமுகமான கே.டி.எம். பைக் மாடல்கள் இளைஞர்களுக்கு பிடித்தமான மாடலாக இருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA விழாவில் கே.டி.எம். அறிமுகம் செய்த டியூக் 390 இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகமானது.

    புதிய கே.டி.எம். டியூக் 390 மாடலில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனைவரை கவரும் வடிவமைப்பு கொண்டிருந்த புதிய டியூக் 390 அகைல்ஸ் ஹீல் கொண்டிருந்தது. மேலும் இந்தியாவில் இந்த மாடல் ஒரே நிறத்தில் (வைப்ரண்ட் ஆரஞ்சு) மட்டுமே கிடைக்கிறது.   



    இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. விற்பனையில் வரவேற்பு பெற்று வரும் நிலையிலும், கே.டி.எம். டியூக் 390 மாடல் ஸ்டெல்த் பிளாக் நிறம் கொண்ட மாடல் பெங்களூருவில் காணப்பட்டுள்ளது. இதன் விலை ஸ்டான்டர்டு மாடலை விட ரூ.10,000 வரை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.   

    ஆஸ்த்ரியாவை சேர்ந்த டியூக் 390 மாடலில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்டிரோக் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 43.5 hp, 37 Nm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸமிஷன், ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு-பை-வையர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    2017 டியூக் 390 மாடலில் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் வசதி, 20 எல்இடிக்கள் கொண்ட ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், மாற்றியமைக்கப்பட்ட ஸ்ப்லிட் சீட் மற்றும் ஃபியூயல் டேன்க் திறன் 13.5 லிட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  
    Next Story
    ×