என் மலர்

  நீங்கள் தேடியது "KTM Duke 390"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கே.டி.எம். நிறுவனம் 2017 மற்றும் 2018 டியூக் 390 மோட்டார்சைக்கிள்களை திரும்ப பெறுகிறது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம். #KTM #Duke


  கே.டி.எம். நிறுவனத்தின் 2017 மற்றும் 2018 டியூக் மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன. கே.டி.எம். நிறுவனம் தனது டியூக் 390 வாடிக்கையாளர்களிடம் மோட்டார்சைக்கிளை எடுத்து வர கேட்டு கொண்டுள்ளது. திரும்ப பெறப்படும் மோட்டார்சைக்கிள்களில் கே.டி.எம். நிறுவனம் மோட்டார்சைக்கிளின் சில பாகங்களை மாற்றிக் கொடுக்க இருக்கிறது.

  மான்சூன் கிட் ஃபிட்மென்ட்-க்காக திரும்ப பெறப்படும் டியூக் 390 மாடலில் புதிய இ.சி.யு. பிராகெட் மற்றும் பில்லியன் சீட் டேம்பிங் பிரஷ்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வழக்கமான ஹெட்லேம்ப் வைப்ரேஷன் பிரச்சனையையும் சரி செய்வதாக தெரிவித்துள்ளது. 

  இத்துடன் கே.டி.எம். தனது மோட்டார்சைக்கிள்களின் மென்பொருளை தேவைப்பட்டால் ஃபிளாஷ் செய்வதாக தெரிவித்துள்ளது. ஹெட்லேம்ப்கள் அடிக்கடி ஆஃப் ஆவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக மென்பொருள் ஃபிளாஷ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அனைத்து புதிய அப்டேட்களையும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.   புதிய இ.சி.யு. பிராகெட் ப்ரோடெக்டிவ் கவருடன் வழங்கப்படுகிறது. பின்புற சீட் மற்றும் டெயில் லைட் இடையே இருக்கும் இடைவெளியை அதிகரிக்க கே.டி.எம். டேம்பிங் புஷ்களை மாற்றி வடிவமைக்கிறது. முன்னதாக இருவர் பயணிக்கும் போது டெயில் லைட்கள் கிராக் ஆவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். 

  2017-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட டியூக் 390 வெளியானதில் இருந்து அதிகளவு குற்றச்சாட்டுகளை பெற்று வருகிறது. டி.எஃப்.டி. டிஸ்ப்ளே அடிக்கடி ரீஸ்டார்ட் ஆவது, ஹெட்லைட்கள் ஸ்விட்ச் ஆஃப் ஆகாமல் இருப்பது, எல்இடி லைட்கள் தானாக ஆஃப் ஆவது, ஃபியூயல் லீக்கேஜ் மற்றும் அடிக்கடி பேட்டரி தீர்ந்து போவது போன்ற குற்றச்சாட்டுகளை வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

  கே.டி.எம். டியூக் 390 மாடலில் 373சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 43.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 37 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. #KTM #Duke
  ×