என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் கடம்பூர் ராஜூ
  X
  அமைச்சர் கடம்பூர் ராஜூ

  அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக வரியில்லாத பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
  கோவில்பட்டி:

  கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

  கழுகுமலை நகரில் 15 வார்டுகளில் உள்ள தெருக்களில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்ேபாது, கடந்த 10 ஆண்டுகளாக தொகுதிக்கு செய்த அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் போன்ற சாதனை பட்டியல் துண்டு பிரசுரங்களை வாக்காளர்களிடம் வழங்கினார்.

  பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

  மக்கள் சக்தி படைத்த தலைவராக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தார். ஆகையால் அவர் தேர்தலின் போது ஹெலிகாப்டர் மூலமாக ஆங்காங்கே வந்து பிரசாரம் செய்தார். ஆனால், மு.க.ஸ்டாலின் ஹெலிகாப்டர், ராக்கெட் ஏவுதளத்தில் வந்தால் கூட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக வரியில்லாத பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கிய போதிலும் கடன் சுமையை மக்கள் மீது திணிக்கவில்லை. அரசே ஏற்றுக் கொண்டது. மக்கள் மீது சுமை இல்லாத ஆட்சியை நடத்தியது. இந்த காரணத்தினால்தான் இரண்டாவது முறை ஆட்சி செய்ய அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தனர். தற்போது 3-வது முறையாகவும் தொடர் வெற்றி பெறக்கூடிய ஆட்சியாக உள்ளது.

  பல கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து தி.மு.க. கடந்த தேர்தலை சந்தித்தது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது.

  ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சட்டமன்றத்தில் தி.மு.க.வினர் செய்த ரகளை தொடர்பான வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும். அதை மக்கள் பார்க்கும்போது தான் தி.மு.க.வுக்கு பதவி வெறி எப்படி உள்ளது என்பது தெரியும்.

  அ.தி.மு.க. 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறும். மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையுடன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன். டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்ற பின்னர் மூன்று முறை தான் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறார். தற்போது கோவில்பட்டி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் இதே நிலைமை தான்.

  நான் தொகுதி மக்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். மக்களை நம்பி நான் தேர்தலில் நிற்கிறேன். தொடர்ந்து 3-வது முறையாக நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×