search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்புமனு தாக்கல் செய்தார் முக ஸ்டாலின்
    X
    வேட்புமனு தாக்கல் செய்தார் முக ஸ்டாலின்

    கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. என்றாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

    5 கூட்டணிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டு விட்டன. இதைத்தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவருடன் சென்றனர். மேளதாளம், தாரைதப்பட்டை முழங்க மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள 6வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்ததும் தி.மு.க. நிர்வாகிகளின் வாழ்த்துகளை பெற்றார். அதன்பிறகு அங்கு திரளாக கூடியிருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.
    Next Story
    ×