என் மலர்

    செய்திகள்

    காவிரி பிரச்சினை - அமைச்சர் சி.வி.சண்முகம் சவாலுக்கு கனிமொழி எம்.பி. பதில்
    X

    காவிரி பிரச்சினை - அமைச்சர் சி.வி.சண்முகம் சவாலுக்கு கனிமொழி எம்.பி. பதில்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் சவாலுக்கு கனிமொழி எம்.பி. பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பில் 3-வது அணி, தேர்தல் கூட்டணி பற்றி பேசவில்லை. மாநில உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தினர். இதை இருவரும் விவரிவாக கூறி உள்ளார்கள் என்றார்.

    அப்போது நிருபர்கள் காவிரி விவகாரத்தில் தி.மு.க. செய்தது என்ன? என்று கூறினால் அ.தி.மு.க.வினர் ஒரு பக்க மீசையை எடுப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் சவால் விடுத்துள்ளதை பற்றி கேட்டனர்.

    அதற்கு கனிமொழி பதில் அளித்து கூறியதாவது:-

    “மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக எதையும் கேட்டு வாங்க முடியாத அ.தி.மு.க. அரசு உள்ளது. அவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. தற்போது ஒரு பக்க மீசையை எடுத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும்.

    சி.வி.சண்முகம் கல்வி அமைச்சராக இருந்துள்ளார். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது பற்றி அவர் படித்து பார்க்க வேண்டும்.

    தலைவர் கலைஞர் செய்ததை பற்றி சட்டமன்றத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன் தெளிவாக பேசி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×