என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காஞ்சீபுரம் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
By
மாலை மலர்8 May 2017 8:40 AM GMT (Updated: 8 May 2017 8:40 AM GMT)

காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகில் 927 மீட்டர் நீளத்தில் 49 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4 வழித்தட ரெயில்வே மேம்பாலப் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகில் 927 மீட்டர் நீளத்தில் 49 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4 வழித்தட ரெயில்வே மேம்பாலப் பணிக்கு காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
திருவேற்காடு, ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் சாலையில் கட்டப்பட்டுள்ள உயர் மட்டப்பாலம்; வேலூர் மாவட்டம் கொல்லக்கொட்டாய் கிராமத்தில் உத்திரக்காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம்; கரூர் மாவட்டம் துக்காச்சியையும் ஈரோடு மாவட்டம் வடிவுள்ள மங்கலத்தையும் இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம்,
நஞ்சை காளகுறிச்சி சாலையிலிருந்து நாகம்பள்ளி செல்லாண்டியம்மன் கோவில் செல்லும் சாலையில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், காசிபாளையம்-கூம்பூர் சாலை மற்றும் கரூர்-வேடசந்தூர் சாலையை இணைக்கும் வகையில் குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம்;
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை கரியாம்பாளையம் சாலையில் கண்ணார் பாளையத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், தேவனாபுரத்திலிருந்து கன்டியூர் வழியாக வெள்ளியங்காடு செல்லும் சாலையில் சாலைவேம்பு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம்; காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் பனையூர் சாலையில் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், புதூர்புதுப்பட்டினம்-பழையாறு சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம்;
நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் பள்ளி பாளையம்-வேலூர் சாலையில் ஜேடர் பாளையத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்; நீலகிரி மாவட்டம், கேத்தி பாலாடா சேலாஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம், ராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பார்த்திபனூர் சாலையில் பிடாரிசேரியில் கட்டப்பட்டுள்ள பாலம்; தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை- சாயல்குடி சாலையில் ஆவணம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம்;
தருமபுரி மாவட்டம், மொரப்பூர்-மாரண்ட ஹள்ளி சாலையில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம், பாப்பிரெட்டிப்பட்டி-மல்லாபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம்; விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிவகாசி கழுகு மலை சாலையில் துலுக்கன் குறிச்சியில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம்;
எண்ணூர் அத்திப்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே அத்திப்பட்டு அருகில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம்; என 86 கோடியே 24லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 உயர்மட்ட பாலங்கள், 6 பாலங்கள், 4 சிறு பாலங்கள் மற்றும் ஒரு ரெயில்வே மேம்பாலம்;
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்ட அலுவலகக் கட்டடம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்ட அலுவலகக் கட்டடம்;
என நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மொத்தம் 87 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம், வளர்புரம் முதல் கிருஷ்ணா புரம் செல்லும் சாலையில் நந்தி ஆற்றின் குறுக்கே 5 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பெஞ்சமின், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜாவைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம்-காட்டு மன்னார் கோயில் மற்றும் சிதம்பரம் வட்டங்களில், மணவாய்க்கால் மற்றும் பழைய கொள்ளிடம் ஆற்றின் நீர் கடத்தும் திறனை மேம்படுத்துதல்; சிதம்பரம் வட்டத்தில், பாசிமுத்தான் மற்றும் தில்லையம்மன் ஓடைகள், ஓமகுளம், கான்சாகிப் மற்றும் முத்தையாபிள்ளை ஆகிய வடிகால்களின் நீர்வடி கொள்ளளவினை மேம்படுத்துதல்;
கடலூர் வட்டத்தில், வீசூர் கிராமத்திலிருந்து தேவனாம்பட்டினம் கிராமம் வரை கெடிலம் ஆற்றினை புனரமைத்து வலுவூட்டல்; பண்ருட்டி வட்டத்தில், வீசூர் மற்றும் பெரியகாட்டுப்பாளையம் ஓடைகளை புனரமைத்து வலுவூட்டல்; கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டங்களிலுள்ள வேலப்பாக்கம் வாய்க்காலினை புனரமைத்து மேம்படுத்துதல் ஆகிய 140 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 142 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட அணையை புனரமைத்தல், புதிய அணைக்கட்டுகள் அமைத்தல், மறுகட்டுமானம் செய்தல் மற்றும் நவீனப் படுத்துதல், புதிய தடுப்பணைகள் அமைத்தல், தடுப்பணைகளை மறு கட்டுமானம் செய்தல், படுகை அணைகளை மறுகட்டுமானம் செய்தல்,
அணை கட்டுகளை புனரமைத்தல், ஏரியினை புனரமைத்து பலப்படுத்துதல், வாய்க்கால் அமைத்தல், வழங்கு வாய்க்கால்களை புனரமைத்து நவீனப்படுத்துதல், புனரமைத்து மின் மயமாக்கி மேம்படுத்தப்பட்ட மதகுகள், அடைப்பான்கள் மற்றும் நீரொழுங்கிகளை புனரமைத்து மேம்படுத்துதல் போன்ற 40 பாசனத் திட்டப்பணிகள்;
தேனி மாவட்டம்-பெரியகுளம் வட்டம், தென்கரை கிராமம், ஆடு பாலம் அருகே வராகநதி ஆற்றின் குறுக்கே 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம், பெருமனாடு கிராமத்தில் பெருமனாடு குளத்தின் உபரி நீர் கால்வாயின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம்; பரமக்குடி வட்டம், வைகை ஆற்றின் இடது புறத்தில் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சேவைச்சாலை;
சென்னை அடையாறு, பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள பொதிகை வளாகத்தில் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 அரசு மாளிகைகள்; என மொத்தம் 155 கோடியே 92லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பொதுப்பணித்துறை திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
2015-16ஆம் ஆண்டிற்கான சிறந்த அணை பராமரிப்புக்கான விருதினை, திருவண்ணாமலை மாவட் டம், சாத்தனூர் அணையை சிறப்பாக பராமரித்த பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் வி.சண்முகம் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் ஆர்.செல்வராஜ் ஆகியோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், செயற்பொறியாளர் ஆர். கோவிந்தராஜன், உதவி செயற்பொறியாளர் எஸ். அருணகிரி, உதவிப் பொறியாளர் எம்.ரமேஷ் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
விருதுநகர் மாவட்டத்தில் 18 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் ஆயுதப்படை வளாகம், சிவகாசி நகரம், சிவகாசி சிறப்பு ஆயுதப்படை வளாகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 125 காவலர் குடியிருப்புகள், கட்டனூர், கிருஷ்ணன்கோவில், வன்னியம்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மேலும், திருவொற்றியூரில் 32 குடியிருப்புகள், கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம், ராமநத்தம் மற்றும் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் 80 குடியிருப்புகள், தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் 17 குடியிருப்புகள், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 10 குடியிருப்புகள், ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் 45 குடியிருப்புகள், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 16 குடியிருப்புகள்,
திருநெல்வேலி மாவட்டம் -தென்காசியில் 32 குடி யிருப்புகள், திருச்சிராப் பள்ளி மாவட்டம் உறையூரில் 32 குடியிருப்புகள், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், செஞ்சி மற்றும் உளுந்தூர்பேட்டையில் 99 குடியிருப்புகள், என 41 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 363 காவலர் குடியிருப்புகள்;
சென்னை மாநகரம்-ராயப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்-ஆழியார், திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மேற்கு நகரம், காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர், கூவத்தூர், சாலவாக்கம் மற்றும் ஒரகடம், நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மற்றும் தேரிருவேலி, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தாலுகா, பாபநாசம் மற்றும் திருவோணம், தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு,
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் மற்றும் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரம், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி, பனவடலிசத்திரம் மற்றும் திருநெல்வேலி தாலுகா, திருச்சிராப்பள்ளி மாவட்டம் வாத்தலை ஆகிய இடங் களில் 15 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 காவல் நிலையங்கள்;
சென்னை மாநகரம் திருவொற்றியூரில் 250 காவலர்களுக்கான பாசறை திண்டுக்கல் மாவட்டம் பழனி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ம் அணிக்கான நிர்வாகக் கட்டடம் மற்றும் பணியிடை பயிற்சி மையம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-ம் அணிக்கான வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டிடம், தேனி மாவட்டம் கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகக் கட்டடம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் 150 ஆண் மற்றும் 50 பெண் காவலர் தங்கும் அறைகள், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிர்வாகக் கட்டடம், என 18 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 இதர காவல் துறை கட்டடங்கள்.
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் 12 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சிறைச்சாலை, சிறார் சீர்த்திருத்தப்பள்ளி மற்றும் மகளிர் இணைப்புச் சிறை;
சென்னை மாநகரம் - தங்கச்சாலையில் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களுக்கான பாசறை; என மொத்தம் 108 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 488 காவல் துறை குடியிருப்புகள்,
25 காவல் நிலையங்கள், 8 இதர காவல் துறை கட்டடங்கள், மாவட்ட சிறைச்சாலை கட்டடம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×