என் மலர்

  செய்திகள்

  பத்மா வெங்கட்ராமனுக்கு 2017-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
  X
  பத்மா வெங்கட்ராமனுக்கு 2017-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

  பத்மா வெங்கட்ராமனுக்கு ‘அவ்வையார்’ விருது: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைமைச் செயலகத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு ‘அவ்வையார்’ விருதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
  சென்னை:

  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தொண்டாற்றி வரும், சென்னை, அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட் ராமனின் சிறந்த சமூக சேவையினை பாராட்டி 2017ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்க தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

  பத்மா வெங்கட்ராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

  அவ்வையார் விருதினை பெற்றுக்கொண்ட பத்மா வெங்கட்ராமன் தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்.

  இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், சமூகநல இயக்குநர் அமுதவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×