என் மலர்

  செய்திகள்

  நேரில் பேசினால் தான் அ.தி.மு.க. 2 அணிகளும் இணைய தீர்வு ஏற்படும்: எஸ்.பி.வேலுமணி பேட்டி
  X

  நேரில் பேசினால் தான் அ.தி.மு.க. 2 அணிகளும் இணைய தீர்வு ஏற்படும்: எஸ்.பி.வேலுமணி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக 2 அணிகளும் நேரில் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு ஏற்படும். கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகள் வரை இருக்கும் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

  கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  அ.தி.மு.க.வில் 2 அணிகளும் இணைய வேண்டும் என சாதாரண தொண்டன் விரும்புகிறான். இதேபோல் அனைவரும் விரும்புகிறார்கள்.

  இதனால் 2 அணிகளும் இணைந்தே தீரும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது. 2 அணிகளும் நேரில் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு ஏற்படும். கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகள் வரை இருக்கும்.

  2 அணிகளும் இணைந்து விட்டால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்படும். சாதாரண தொண்டன் விரும்புவதை போல இரட்டை இலையை மீட்க அனைவரும் பாடுபட்டு வருகிறோம்.

  இதைதொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,


  தற்போது அ.தி.மு.க.வில் 2 அணிகளும் பேச்சு வார்த்தை மூலம் விரைவில் சேருவோம். ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும், எக்காரணத்தை கொண்டும் தி.மு.க.வை உயிர்த்தெழ விட மாட்டோம் என்றார்.

  Next Story
  ×