என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
    • இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பெற்றோர் இறந்துவிட்டனர்.

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. நேற்று காலையில் இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது.

    இந்தநிலையில் தற்போது நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் குழந்தைகள் ஆவர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.

    இந்த நிலையில் இந்தோனேசிய நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. சியாஞ்சூர் பகுதியில் குகநாங் துணை மாவட்டத்தில் நக்ராங் கிராமத்தில் நடந்த மீட்பு பணியில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த அஜ்கா மவுலானா மாலிக் என்ற அந்த சிறுவனை இந்தோனேசிய பேரிடர் மேலாண்கழகம் மீட்டு உள்ளது.

    இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி உயிரிழந்துவிட்டார். அவரது உடல் அருகிலேயே சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பெற்றோர் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்களை ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டன.

    • 2000க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • ஜனாதிபதி ஜோகோ விடோடோ சியாஞ்சூருக்கு சென்று நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட ஏராளாமன கட்டிங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள். மேலும் 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

    இன்றைய மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது சிறுவன் மீட்கப்பட்டான். வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய அந்த சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டிருக்கிறான்.

    இந்நிலையில் சியாஞ்சூர் பகுதியில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருவதால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இன்று மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. மீட்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    2000க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் ஜாவா தீவின் அருகில் உள் மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. பலருக்கு படுக்கை வசதி கிடைக்காத நிலையில், ஸ்டிரெச்சரில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஜனாதிபதி ஜோகோ விடோடோ நேற்று சியாஞ்சூருக்கு சென்று நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். சிதைந்துபோன அப்பகுதியில் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும், வீடு சேதமடைந்த ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் 50 மில்லியன் ரூபியா (3,180 டாலர்கள்) வரை உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • நிலநடுக்கத்தில் பெருமளவில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

     ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெருமளவில் குழந்தைகளே உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் பள்ளி குழந்தைகள் என தெரிய வந்து உள்ளது. 151 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் ஜகர்த்தாவின் தெற்கு பகுதியில் 2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை 5,300-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.
    • ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்.

    தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

    பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

    இந்தநிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.

    நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

    சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த செங்கல் வீடுகளில் புதையுண்டவர்களைத் தேடினர். பல வீடுகளில், படுக்கையறைகளுக்குள் கான்கிரீட் மற்றும் கூரை ஓடுகள் விழுந்து கிடந்தன.

    மதிய நிலவரப்படி 20 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்தார். நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இன்று இரவு நிலவரப்படி உயிரிழப்பு 162 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
    • பொதுமக்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் முக்கிய தீவு பகுதியான மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன, அதில் குடியிருந்தவர்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்துள்ளார்.

    மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமானோர் இருளில் தவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 460 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவுக்கும், கனடாவுக்கும் ஏற்கனவே பிரச்சினைகள் உண்டு.
    • இது தொடர்பான வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலி :

    இந்தோனேசியாவின் பாலித்தீவில் 'ஜி-20' நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 15, 16-ந் தேதிகளில் நடந்தது.

    இந்த மாநாட்டின்போது, மூடிய அறையில் நடந்த விவாதத்தில் தங்கள் நாட்டின் தேர்தல்களில் சீனா தலையிட்டதாகவும், உளவு பார்த்ததாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிப்பேசினார். இது தொடர்பாக அவரும் சீன அதிபர் ஜின்பிங்கும் பேசிக்கொண்டவை, அங்குள்ள நாளேடுகளில் செய்திகள் ஆகின. அவற்றை கண்டு சீன அதிபர் ஜின்பிங் அதிர்ந்து போனார். இந்தத் தகவல்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதான் ஊடகங்களில் கசிய விட்டுள்ளார் என அவர் முடிவுக்கு வந்தார்.

    இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சீன அதிபர் ஜின்பிங் நேருக்கு நேர் மோதினார். குறிப்பாக அவர், " ஜி-20 உச்சி மாநாட்டில் பேசப்பட்ட இந்த தகவல்கள் வெளியே கசிந்தது சரியல்ல, இந்த நடத்தை பொருத்தமற்றது" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் மாண்டரின் என்னும் சீனப்பேச்சு வழக்கு மொழியில் கூறினார். அதை அவரது மொழி பெயர்ப்பாளர் மொழிபெயர்த்தும் சொன்னார்.

    ஒரு நாட்டின் அதிபர், இன்னொரு நாட்டின் பிரதமரை நோக்கி நேருக்கு நேர் கூறிய இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனாலும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிரித்தவாறு தலையாட்டிக்கொண்டு, " கனடாவில் நாங்கள், சுதந்திரமான, வெளிப்படையான, மனம் திறந்த பேச்சில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்," என பதிலடி கொடுத்தார்.

    மேலும், "நாம் ஆக்கப்பூர்வமான வகையில் பணியாற்றுவது பற்றி தொடர்வது குறித்து ஆராய்வோம். ஆனால், நாங்கள் உடன்படாத விஷயங்களும் அவற்றில் இருக்கும்" என குறிப்பிட்டார்.

    ஆனால் அவர் இதைச் சொல்லி முடிக்கும் முன்பாக சீன அதிபர் ஜின்பிங் குறுக்கிட்டு, "முதலில் அதற்கான சூழலை நீங்கள் உருவாக்குங்கள்" என்று கூறி விட்டு ஜஸ்டின் ட்ரூடோவுடன் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சீனாவுக்கும், கனடாவுக்கும் ஏற்கனவே பிரச்சினைகள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

    • இந்தோனேசியாவில் ‘ஜி-20’ உச்சி மாநாடு நடந்தது.
    • உலகத்தலைவர்களுக்கு பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

    இந்தோனேசியாவில் 'ஜி-20' உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாசார செழுமையை, பாராம்பரியத்தை பறைசாற்றும் கலை படைப்புகளை, பொருட்களை பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளாக வழங்கினார். இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-

    * அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 'சிருங்கர் ராசா'வை சித்தரிக்கும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

    * இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு வழங்கிய நினைவுப்பரிசு, குஜராத்தில் பெண் தெய்வ கோவில்களுக்கு காணிக்கையாக வழங்குகிற கைத்தறி ஆடை ஆகும்.

    * ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு அவர் தந்தது, குஜராத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைப்பொருளான பித்தோரா.

    * இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு, 'படன் படோலா' துப்பட்டா ஆகும்.

    * பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோருக்கு நினைவுப்பரிசாக தந்தது, குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைப் பொருளான 'அகேட்' கிண்ணங்கள் ஆகும்.

    * 'ஜி-20' உச்சி மாநாட்டை நடத்திய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு குஜராத்தின் சூரத் நகரின் திறமையான தொழிலாளிகளால் செய்யப்பட்ட தனித்துவமான, நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட வெள்ளிக் கிண்ணம், இமயமலைப்பகுதியில் சிறப்பு வாய்ந்த கின்னவுர் சால்வை ஆகியவற்றை பிரதமர் மோடி வழங்கினார்.

    • சதுப்பு நிலக்காட்டை பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர்.
    • மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் சேர்ந்த ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. நிறைவு நாளான நேற்று அங்குள்ள சதுப்பு நிலக்காட்டை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர். அப்போது மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடிக்கு 'சல்யூட்' அடித்தார். உடனே மோடியும், இருக்கையில் அமர்ந்தவாறு தனது கையை தூக்கியவாறு 'ஹாய்' என்று கூறினார்.

    இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வணக்கம் கூறிக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.

    • பிரிட்டன்-இந்தியா உறவின் நீடித்த முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்
    • மோடியும் சுனக்கும் பிரிட்டன்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்

    பாலி:

    இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். முதல் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்பு முடிந்து சில மணி நேரத்தில் பிரிட்டன் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, 'ஒவ்வொரு வருடமும் 3,000 திறமையான பட்டதாரிகளை இந்தியாவில் இருந்து வேலைக்கு அழைக்கும் சிறப்பு விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 30 வயது வரையிலான இந்தியர்கள், இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் பணியாற்ற முடியும்.

    இந்தத் திட்டம் பரஸ்பரம் இருக்கும் என்றும், இந்தியா-பிரிட்டன் உறவு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்புக்கு இது ஒரு முக்கியமான தருணம் என்றும் பிரிட்டன் அரசு கூறியிருக்கிறது.

    பிரிட்டன்-இந்தியா உறவின் நீடித்த முக்கியத்துவம் மற்றும் நமது நாடுகளுக்கு இடையே வாழும் பாலமாக இருக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், ரிஷி சுனக்கை பிரதமராக நியமித்தபோது, இந்திய மக்கள் அளித்த ஆதரவுக்காக பிரதமர் மோடிக்கு சுனக் நன்றி தெரிவித்ததாகவும் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சுனக் உடனான தனது பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கருத்து தெரிவித்த மோடி, வலுவான இந்தியா-பிரிட்டன் உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.

    இந்த பேச்சுவார்த்தையானது வர்த்தகம், இயக்கம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற ஒத்துழைப்பின் முக்கிய இலக்கை தொட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. மோடியும் சுனக்கும் பிரிட்டன்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்நோக்கியுள்ளனர், இது முதலீட்டுக்கான கதவுகளை திறக்கும் மற்றும் இரு நாடுகளிலும் வேலைகளை அதிகரிக்கவும், நமது ஆழமான கலாச்சார இணைப்புகளை விரிவுபடுத்தவும் வாய்ப்புள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    • மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.
    • அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

    இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.

    நேற்றைய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தினார்.

    மேலும் செனகல் அதிபர் மேக்சி சால், நெதர்லாந்து அதிபர் மார்க்ரூட் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரை சந்துத்து நலம் விசாரித்தார்.

    பிரதமர் மோடி இன்று பாலி தீவில் உள்ள அலையாத்தி காடுகளை பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக அந்த காடுகளை உலக நாடுகள் பராமரித்து அழிவில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அலையாத்தி காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அலையாத்தி காடுகளை பார்வையிட்டனர்.

    தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது அரணாக இருந்து பாதிப்பை தடுத்ததில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகித்தன.

    மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூக், ஜெர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. ஜி-20க்கு இந்தியா தலைமை தாங்குவதையடுத்து அதற்கான செயல்முறைகளை பிரதமர் மோடியிடம் இந்தோனேசியா அதிபர் விடோடோ முறைப்படி வழங்கினார்.

    உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார்.

    இதன்மூலம், டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி உலக தலைவர்களின் தலைவரானார்.

    • அவர்களோடு பிரதமர் மோடி இயல்பாக பேசி மகிழ்ந்தார்.
    • இந்த சந்திப்பு மேளதாளங்களுடன் திருவிழா கொண்டாட்டம் போல அமைந்தது.

    பாலி :

    இந்தோனேசியாவின் பாலித்தீவில் 'ஜி-20' நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று எத்தனையோ சந்திப்புகளை நடத்தினார். அவர் மனம் கவர்ந்த சந்திப்புகளில் முதல் இடம் பிடித்தது, அங்கு வாழ்கிற இந்திய மக்களை சந்தித்ததுதான் என்றால் அது மிகையல்ல.

    அவரை சந்திப்பதற்காக இந்திய மக்கள் நமது பாரம்பரிய உடைகளிலும், தலைப்பாகைகள் அணிந்து கொண்டும் ஏராளமாக வந்திருந்தனர். அவர்கள் "பாரத மாதாவுக்கு ஜே" என்று ஆரவாரித்தனர். பிரதமர் மோடியை நோக்கி இரு கைகளைக் கூப்பி வணங்கினர். அவரும் புன்சிரிப்புடன் அவர்களது வணக்கத்தையும், வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்டார்.

    அவர்களோடு பிரதமர் மோடி இயல்பாக பேசி மகிழ்ந்தார். இந்த சந்திப்பு மேளதாளங்களுடன் திருவிழா கொண்டாட்டம் போல அமைந்தது. 'டிரம்' வாசித்தவர்களுடன் பிரதமர் மோடியும் சேர்ந்து சில வினாடிகள் 'டிரம்' இசைத்தார். இதைக்கண்ட அனைவரும் உற்சாகத்தில் மிதந்தனர்.

    ×