என் மலர்

  ஆரோக்கியம்

  கியாஸ் சிலிண்டர்
  X
  கியாஸ் சிலிண்டர்

  கியாஸ் சிலிண்டரின் ஆயுள் காலம் தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரு சிலிண்டரில் B.21 என்று போட்டிருக்கிறது என்று வைத்து கொள்வோம். இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது 2021 ஆண்டையும் குறிக்கிறது.
  இன்று கியாஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று ஆகி விட்டது. அனைவரின் வீடுகளிலும் கியாஸ் அடுப்பு இடம் பிடித்து உள்ளது. கியாஸ் அடுப்புக்கு பயன்படுத்தும் சிலிண்டரின் ஆயுள் காலத்தை ஒவ்வொரு குடும்ப பெண்களும் தெரிந்து கொள்வது நல்லது. அது பற்றி பார்ப்போம்:-

  நாம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் ஆயுள் காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கிறது. அது மேலிருக்கும் 3 வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் சிலிண்டரின் ஆயுட்காலம், காலாவதியாகும் தேதி போட்டிருக்கும். அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்..

  அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C..இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

  உதாரணமாக ஒரு சிலிண்டரில் B.21 என்று போட்டிருக்கிறது என்று வைத்து கொள்வோம். இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது 2021 ஆண்டையும் குறிக்கிறது.

  ஜனவரி, பிப்ரவரி, மார்ச் முதல் காலாண்டு A

  ஏப்ரல், மே, ஜூன் இரண்டாம் காலாண்டு B

  ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மூன்றாம் காலாண்டு C

  அக்டோபர், நவம்பர், டிசம்பர் நான்காம் காலாண்டு D

  உதராணமாக B-12 என்று போட்டிருந்தால், இரண்டாம் காலாண்டு ஜூன் முடிய 2012 என்று பொருள்படும்.

  அதுபோலவே தங்களுடைய சமையல் சிலிண்டரில் இருப்பதையும் ஒரு முறை பார்வையிட்டு சரியானதுதானா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை முந்தைய வருடங்களாக இருந்தாலோ முந்தைய மாதங்களாக குறிக்கப்பட்டிருந்தாலோ அந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திருப்பி தந்துவிட்டு நடப்பு தேதியிட்ட, நடப்பாண்டிலிருக்கும் சிலிண்டரை பெற்றுக்கொள்ளுங்கள். அதுபோலவே பெற்றுக்கொண்ட சிலிண்டரை பாதுகாப்பான முறையில் திறந்து பழகிக்கொள்ள வேண்டும்.

  மேல் மூடியை அதில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றை நம்மை நோக்கி வருமாறு ஒரு கையில் இழுத்து வைத்துக் கொண்டு, மறு கையில் அம்மூடியை மேலே இழுத்து மூடியை அகற்றலாம்.
  Next Story
  ×