
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் இருக்காது.
* 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டு, தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
* 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவமனைக்குச் சென்று, அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது மார்பகங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்;
* குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் பாதிப்பு இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் "மமோகிராம்' (சிறப்பு எக்ஸ் ரே) பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
* குடும்பத்தின் நெருங்கிய உறவினர் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் அல்லது சினைப் பை புற்று நோய் இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்கு மேல் மார்பக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.