
மாதுளை :
மாதுளை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிப்பது மட்டுமன்றி இரட்டிப்பாக்குகிறது. கருப்பையையும் வலுப்பெறச் செய்கிறது.
பால் மற்றும் பால் பொருட்கள் :
பாலில் உள்ள வைட்டமின்கள் ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பேரிட்சை :
பேரிட்சை பழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் கர்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே உதவுகிறது. கருப்பையின் உறுதியை பாதுகாப்பது மட்டுமன்றி கரு நின்ற பிறகும் தக்க வைக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள் :
ஆரஞ்சு, சாத்துகுடி என சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் இனப்பெருக்க செயல்பாட்டை துரிதப்படுத்த உதவும் என்பது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது.