search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மார்பக புற்றுநோய்
    X
    மார்பக புற்றுநோய்

    ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

    மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.
    ஒவ்வொரு மார்பக புற்றுநோயும், மார்பகத்திற்குள் (5 செ.மீக்கும் குறைவான) அடங்கியுள்ள ஊடுருவும் புற்றுநோய் ஆகும். மேலும், மார்பகத்தில் அல்லது அக்குளிலுள்ள நிணநீர் கணுக்களுக்கு இது பரவியிருக்கலாம் அல்லது பரவாமலும் இருக்கலாம். மார்பகத்தை அகற்றாமல் அப்படியே பராமரிப்பதை இலக்காகக்கொண்டு புற்றுநோய் கட்டியை மட்டும் நீக்குவதே, ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதன் நோக்கமாகும்.

    ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் பின்வருவன உள்ளடங்கும்

    * மார்பக அறுவைசிகிச்சை (Breast Surgery)
    * வேதியியல் சிகிச்சை (Chemotherapy)
    * கதிரியக்க சிகிச்சை (Radio Therapy)
    * இலக்குடைய சிகிச்சை (Targeted Therapy)
    * ஹார்மோன் சிகிச்சை (Hormone Therapy).

    மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம். மார்பக காப்பு அறுவை சிகிச்சையையடுத்து கதிரியக்க சிகிச்சை செய்வது என்பது, ஆரம்பகால மார்ப புற்றுநோய் உடைய பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தை அப்புறப்படுத்துவது என்பது நல்லதொரு பயனளிப்பதாக இருக்கும். அறுவைசிகிச்சையில், அக்குளிலுள்ள நிணநீர்க்கணுக்களை அப்புறப்படுத்துவதும் உள்ளடங்கும்.

    அக்குளில் உண்டாகும் கணுக்களை ஒரு சென்டினல் நிணநீர் கணு உடல்திசு ஆய்வுசெய்து, கணு பாசிட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே ஒரு முழு அக்குள் பிளப்பாய்வு (Axillary dissection) செய்வது சமீபத்திய சிகிச்சை முன்னேற்றமாக இருக்கிறது. கீமோதெரபி சிகிச்சை முறை - ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சையளிப்பது மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது உடலின் இதர பாகங்களுக்கு பரவுவதற்கான ஆபத்தை குறைக்கக்கூடும். கீமோதெரபி சிகிச்சையானது, மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்து உயிர்பிழைப்பதற்குரிய வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும்.

    கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு மட்டுமே இதர சிகிச்சை முறைகள் தொடங்கப்படுகின்றன. கதிரியக்க சிகிச்சைமுறை - பெரும்பாலும் ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு, மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கதிரியக்க சிகிச்சை எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில், ஒட்டுமொத்த மார்பக நீக்க சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

    ஹார்மோன் சிகிச்சைமுறை- தங்களுடைய மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் (ஹார்மோன் ஏற்பிகள்) (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரோன் ரிசப்டர்கள்) கொண்டுள்ள ஆரம்பகால மார்பக புற்றுநோய் உடைய பெண்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தனியாகவோ அல்லது மற்ற மார்பக புற்றுநோய் சிகிச்சைகளுடனோ சேர்த்து பயன்படுத்தப்படலாம். ஒரு ஹார்மோன் சிகிச்சை முறையுடன் கூடிய ஒரு சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாமா மற்றும் எந்த ஹார்மோன் சார்ந்த சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என்பது குறித்த முடிவு பின்வருவனவற்றை சார்ந்திருக்கும்:

    * மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் உள்ளனவா
    * அந்தப்பெண் மாதவிடாயின் இறுதி நிலையை (மெனோபாஸ்) அடைந்துவிட்டாரா?

    ஹார்மோன் சிகிச்சைகள், மார்பக புற்றுநோய் (மார்பகங்களிலும் மற்றும் உடலின் மற்ற பாகங்களில்) மீண்டும் வரும் ஆபத்தை குறைக்கிறது. சில ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு குணமடைந்து உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் அறியப்பட்டுள்ளது. இலக்குடைய சிகிச்சை (Targetted Therapy) அல்லது உயிரியியல் சிகிச்சை குறிப்பிட்ட வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்தக்கூடிய மருந்துகள் ஆகும். ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பொதுவான பயன்படுத்தப்படும் இலக்குடைய சிகிச்சை Trastuzumab ஆகும். அதாவது HER 2 ரிசப்டர்களுக்கு எதிராக Herceptin மருந்து செலுத்துவது.
    Next Story
    ×