search icon
என் மலர்tooltip icon

  லைஃப்ஸ்டைல்

  எட்டாம் மாதம்: குழந்தையின் தலை கீழ்நோக்கித் திரும்பும்
  X
  எட்டாம் மாதம்: குழந்தையின் தலை கீழ்நோக்கித் திரும்பும்

  எட்டாம் மாதம்: குழந்தையின் தலை கீழ்நோக்கித் திரும்பும்

  எட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும்.
  எட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும். ரத்தப்போக்கு ஏற்படுதல் மற்றும் குறைப்பிரவசத்தில் குழந்தை பிறப்பது போன்ற சூழல்கள் இருப்பதால் மிகுந்த கவனம் அவசியம். குழந்தை கண் இமைகளை அடிக்கடி மூடித்திறக்கும். சிறுநீர் கழிக்கவும் செய்யும்.

  * அடிக்கடி வயிறு இழுத்துச் சுருங்குவதுபோல் தோன்றும். இந்த அவஸ் தைக்கு ‘பிராக்ஸ்டன் ஹிக்ஸ் கண்ட்ராக்‌ஷன்’ என்று பெயர்.

  * கர்ப்பப்பை வளர்ந்து தொப்புளுக்கு மேல் பெரிதாகிவிடுவதால் சில நேரங் களில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவதுபோல் தோன்றும். அவ்வப்போது நெஞ்செரிச்சலும் ஏற்படும்.

  * குழந்தை கண் இமைகளை மூடித் திறப்பதோடு, தலையையும் அங்கும் இங்குமாக அசைக்கும்.

  * மூளையில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்படும்.

  * 29-ம் வாரத்தில் இருந்து குழந்தை தினமும் கிட்டத்தட்ட அரை லிட்டர் அளவுக்கு சிறுநீரை வெளியேற்றும்.

  * இந்த காலகட்டத்தில் 44 செ.மீ. நீளத்துடன், இரண்டு கிலோ எடையை எட்டிப்பிடித்திருக்கும்.

  * எட்டாவது மாதத்தில் அடிக்கடி குழந்தை அசையும். அவ்வப்போது தூங்கவும் செய்யும்.

  * குழந்தை வேகமாக வளருவதால் கர்ப்பப்பையில் இட நெருக்கடி தோன்றும். தலை கீழ்நோக்கி பெல்விஸ் பகுதிக்கு திரும்பும். இந்த தருணத்தில் நான்கு சதவீத குழந்தைகள் தலையை மேல்நோக்கி வைத்துக்கொண்டோ, குறுக்காக படுத்தது போன்ற நிலையிலோ காணப்படும்.

  * ஒருசிலருக்கு ரத்தப்போக்கு, நிறைமாதம் ஆகும் முன்பே பிரசவ வலி தோன்றுதல் போன்றவை ஏற்படலாம். பிறப்பு உறுப்பு வழியாக நீர் வெளியேறுவதும் உண்டு. இவை அனைத்தும் மிக நெருக்கடியான விஷயம் என்பதால் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடவேண்டும்.

  * கர்ப்பப்பையின் எடை அதிகரித்துவிடுவதால் மிக கவனமாக, நிதானமாக நடக்கவேண்டும்.

  * உடலில் பல்வேறு விதமான அவஸ்தைகள் ஏற்படுவதால் கர்ப்பிணி மனதளவில் தளர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். இந்த நெருக்கடி அனைத்தும் தற்காலிகமானது என்றும், விரை வில் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறோம் என்றும் நினைத்து தாய் தனது மனதில் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் உருவாக்கிக்கொள்வது அவசியம்.

  * சத்துணவு உண்ணுதல், எளிய உடற்பயிற்சி, போதுமான ஓய்வு போன்றவை மனதுக்கு இதமளிக்கும்.

  * வழக்கம் போல் இடது பக்கம் ஒருக்களித்து படுப்பது நன்றாக தூங்க வழிவகை செய்யும்.

  * நெஞ்செரிச்சல் அதிகமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து தலையை நன்றாக உயர்த்திவைத்த நிலையில் ஓய்வெடுக்கவேண்டும்.

  * வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக சிரமத்தை உணர்ந்தால் லீவு எடுத்துக்கொண்டு ஓய்வில் இருப்பது நல்லது.

  * வயிறு பெரிதாகிவிடுவதால் உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் தேவை. மூச்சை அடக்கும் விதத்திலான பயிற்சிகளை செய்யக்கூடாது. உடலுக்கு சோர்வை ஏற்படுத்தாத பயிற்சிகளையே செய்யவேண்டும். காலையும், மாலையும் சிறிது நேரம் நடப்பது நல்லது.

  * எட்டாவது மாதத்திற்கு பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டாக்டரை சந்திக்கவேண்டும். தேவைப்பட்டால் அவரது பரிந்துரையின்படி ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

  * மலச்சிக்கல் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதால் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழங்கள், காய்கறி, கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. நிறைய தண்ணீரும் பருகவேண்டும். தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிடுவதும் நல்லது.
  Next Story
  ×