search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் இரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
    X

    கர்ப்ப காலத்தில் இரத்த சோகையை தடுக்கும் உணவுகள்

    கர்ப்ப காலத்தில் பெண்கள் எடை குறைவு மற்றும் இரத்த சோகை பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
    * இரண்டு அத்தி பழம், இரண்டு பேரிட்சை, காய்ந்த‌ திராட்சை இவை மூன்றையும் தினம் காலையில் சாப்பிட‌வேண்டும். இது முன்றையும் சேர்த்து ஹ‌ல்வாவாக‌வும் செய்து சாப்பிட‌லாம்.

    * புரோகோலி சூப், பொரிய‌ல், புரோகோலி பீஃப் போன்ற‌வை சாப்பிட‌லாம். இந்த புரோகோலியில் அதிக இரும்பு சத்து உள்ளது.

    * ஏதாவ‌து ஒரு கீரை சிறு ப‌ருப்பு சேர்த்து கூட்டு வைத்து (அ) பிர‌ட்டியோ க‌றியுட‌ன் சேர்த்தோ சாப்பிட‌லாம்.

    * ம‌ண்ணீர‌ல் சுட்டு அல்ல‌து பொரித்தோ சாப்பிட‌லாம். இது வார‌ம் முன்று முறை சாப்பிட்டாலே ஹிமோகுளோபின் அள‌வு கூடும்.

    * சால‌ட் நிறைய‌ செய்து சாப்பிட‌லாம்.

    * கொத்தும‌ல்லி, க‌றிவேப்பிலை அரைத்து, துவையலாக‌ (அ) ர‌ச‌ம் வைத்து சாப்பிட‌லாம்.

    * ப‌யிறு வ‌கைக‌ளை ஊற‌வைத்து அடையாக‌ சுட்டு சாப்பிட‌லாம்.

    * கேழ்வ‌ர‌கில் பான‌ம், புட்டு,இனிப்பு அடை போன்ற‌வை சாப்பிட‌லாம்.

    9. பீட்ரூட் ஜூஸ், பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.

    * இரவில் மட்டும் லேசான ஆகாரங்கள் உண்பது நல்லது அதுவும் 7 லிருந்து 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து கொள்ளவும்.

    ஒரு நாளைக்கு முன்று ட‌ம்ள‌ர் பால் அருந்துவ‌து ந‌ல்ல‌து. இது குழ‌ந்தை வ‌ள‌ரும் ச‌மய‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு தேவையான கால்சிய‌ம் ச‌த்து கிடைத்து விடும்.

    அதே போல் தாய்மார்கள் சாப்பிடும் ஓவ்வொரு உணவும் குழந்தையை போய் தான் அடைகிறது என்பதை மனதில் கொண்டு நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். இரண்டு மாதத்திலிருந்து ஐந்து மாதம் வரை எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான ஆகரம் சாப்பிடுகிறீர்களோ வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவ்வளவு ந‌ல்ல‌து.
    Next Story
    ×