search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பிரசவத்துக்குப் பிறகு தாம்பத்திய ஆர்வம் குறையுமா?
    X

    பிரசவத்துக்குப் பிறகு தாம்பத்திய ஆர்வம் குறையுமா?

    • பிரசவத்துக்குப் பிறகு எப்போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.
    • சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். இதனால், சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு இத்தனை நாள்கள் கழித்துதான் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்ட கால இடைவெளி எதுவும் வலியுறுத்தப்படுவதில்லை. ஆனால் பிரசவமான அடுத்த ஆறு வாரங்களுக்கு உறவு கொள்ள வேண்டாம் என பொதுவாக அறிவுறுத்தப்படும்.

    கர்ப்பத்தின் போது விரிந்திருந்த கர்ப்பப்பை சுருங்கி, சிறியதாக ஆறு வாரங்கள் ஆகும். நார்மல் டெலிவரி என்றால் வெஜைனா பகுதியில் போடப்பட்ட தையல் ஆறுவதற்கும் அந்த அவகாசம் அவசியம் என்பதால் ஆறு முதல் 8 வாரங்களுக்கு உறவைத் தவிர்க்கும்படி அறிவுறுத்துவோம்.

    தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். பீரியட்ஸும் வராமலிருக்க வேண்டும்.

    எனவே தாய்ப்பால் மட்டுமே கொடுத்துக் கொண்டும், பிரசவமான ஆறு மாதங்கள் வரை பீரியட்ஸ் வராமலும் இருப்பவர்கள், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

    சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம். அது அவர்கள் மீண்டும் கருத்தரிக்கத் தயாராகிவிட்டதையே குறிக்கும். அவர்களுக்கு கருத்தடை அவசியம். ஆணுறை உபயோகிக்கலாம் அல்லது பிரசவமானபோதே காப்பர் டி பொருத்திக்கொள்ளலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவு குறையத் தொடங்கும். இதன் காரணமாக சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் அது குறித்துக் கவலைப்படத் தேவையே இல்லை. நாள்கள் போகப் போக, உங்களால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும். இழந்த ஆர்வம் மீண்டும் திரும்பும்.

    Next Story
    ×