என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கறிவேப்பிலை தொக்கு
    X
    கறிவேப்பிலை தொக்கு

    உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை தொக்கு

    கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. இன்று கறிவேப்பிலையில் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - 1 கப்
    புளி - சிறிய எலுமிச்சை பழம்அளவு
    துருவிய வெல்லம் - ஒரு கைப்பிடி அளவு
    காய்ந்த மிளகாய் - 4
    கடுகு - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு
    கடுகு பொடி - சிறிதளவு

    செய்முறை:

    புளியையும், மிளகாயையும் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    பிறகு கறிவேப்பிலை விழுதைக் கொட்டி கிளறவும்.

    கெட்டி பதத்துக்கு வந்ததும் வெல்லம், உப்பு தூவி கிளறி இறக்கவும்.

    அதனுடன் கடுகு பொடி தூவி பரிமாறலாம்.
    Next Story
    ×