search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிக்கன் நெய் சோறு
    X
    சிக்கன் நெய் சோறு

    சூப்பரான சிக்கன் நெய் சோறு

    குழந்தைகளுக்கு பிடித்தான சிக்கனுடன் நெய் சேர்த்து சூப்பரான சிக்கன் நெய் சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    பாசுமதி அரிசி - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    எலுமிச்சைபழம் - அரை மூடி
    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - கால் கிலோ
    தக்காளி - 3
    இஞ்சி - ஒரு துண்டு
    பூண்டு - 10 பல்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    பட்டை - சிறிது
    புதினா - கால் கட்டு
    கொத்தமல்லி இலை - கால் கட்டு
    முந்திரிப்பருப்பு - 10
    தேங்காய் - கால் மூடி
    நெய் - 100 கிராம்

    சிக்கன் நெய் சோறு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்கு கழுவி அதனுடன் 1 1/2 மடங்கு நீர் ஊற்றி குழையாமல் உதிரியாக வேக வைத்து கொள்ளவும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.

    தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தனியே வைக்கவும்.

    அடுத்து வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும். அதில் பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

    வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து போட்டு வதக்கி, வாசனை வரும் போது மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து அதில் தக்காளி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி, கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான தணலில் வேக வைக்கவும்.

    அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும்.

    பிறகு கொத்தமல்லி, புதினாவைத் தூவவும்.

    அடுத்து அதில் ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும்.

    கடைசியில் வறுத்த முந்திரி பருப்பு, தனியான எடுத்து வைத்த வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் நெய் சோறு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×