search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிக்கன் போட்லி
    X
    சிக்கன் போட்லி

    சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் போட்லி

    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் போட்லி ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    பூண்டு - 50 கிராம்
    இஞ்சி - 25 கிராம்
    உப்பு - சுவைக்க
    அரோமடிக் பௌடர் - 1 தேக்கரண்டி
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    ஆய்ஸ்டர் சாஸ் - 1/2 தேக்கரண்டி
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    ஃபிலோ ஷீட் (phyllo sheets) - 6 துண்டுகள்

    சிக்கன் போட்லி

    செய்முறை


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்த பூண்டு, வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் அதில் சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு பிரட்டவும்.

    அத்துடன் எல்லாவகை சாஸ் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வேக வைக்கவும்.

    இதனை ஒரு பௌலில் மாற்றி ஆற வைக்கவும்.

    போட்லிஸ் தயார் செய்ய:

    ஃபிலோ ஷீட் எடுத்து அதில் வதக்கி வைத்தவற்றை உள்ளே வைத்து கைகளால் மடக்கி வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். தயார் செய்து வைத்திருந்தவற்றை எண்ணெயில் போட்டு 5 -6 நிமிடங்கள் பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

    சூடாக, ப்ளாக் பீன் சாஸ் அல்லது ஸ்வீட் சில்லி சாஸுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×