search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் சுவிஸ் ரோல்
    X

    குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் சுவிஸ் ரோல்

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த சுவிஸ் ரோலை ஸ்நாகஸாக கொடுத்து அனுப்பலாம். இன்று இந்த சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொடித்த மேரி பிஸ்கெட் - 4 கப்,
    சாக்லெட் சிரப் - 4 டீஸ்பூன்,
    இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்,
    உலர்ந்த தேங்காய்த்துருவல் - அரை கப்,
    பவுடர் சுகர் - 4 டீஸ்பூன்,
    வெண்ணெய் - 8 டீஸ்பூன்,
    பால் - 4 டீஸ்பூன்,
    தண்ணீர் - 4 டீஸ்பூன்,
    பட்டர் பேப்பர் - தேவைக்கு.



    செய்முறை :

    ஒர பாத்திரத்தில் பிஸ்கெட் தூள், சாக்லெட் சிரப், காபி பவுடர், 2 டீஸ்பூன் வெண்ணெய், தண்ணீர் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவல், சர்க்கரை தூள், வெண்ணெய், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெய் தடவி சாக்லெட் மாவை வைத்து பூரிக்கட்டையால் அரை இஞ்ச் தடிமனில் தேய்க்கவும்.

    அதன் மீது தேங்காய் கலவையை சிறிதளவு வைத்து பேப்பருடன் சேர்த்து நன்கு அழுத்தமாக உருட்டி, அப்படியே பேப்பருடன் ஃப்ரிட்ஜில் 4 முதல் 6 மணி நேரம் வைத்து செட் செய்து பின்பு பரிமாறவும்.

    சூப்பரான சுவிஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×