search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சிக்கன் சூப் ரைஸ்
    X

    சூப்பரான சிக்கன் சூப் ரைஸ்

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - 100 கிராம்
    வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
    சின்ன வெங்காயம் - 5
    தக்காளி - ஒன்று
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் -  ஒரு டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
    கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்
    பூண்டுப் பல் - ஒன்று
    நெய் (அ) நல்லெண்ணெய்  - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள்  - அரைக்கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

    குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.

    பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×