என் மலர்
பெண்கள் உலகம்

சூப்பரான வெஜிடபிள் வெள்ளை குருமா
சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜிடபிள் வெள்ளை குருமா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
உருளைக்கிழங்கு - 2
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
பட்டாணி - 50கிராம்
பச்சை மிளகாய் - 5
தேங்காய்துருவல் - கால் மூடி
கசகசா - அரை ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 5 ஸ்பூன்
தாளிக்க :
கிராம்பு
பட்டை
ஏலக்காய்

செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு, அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story