என் மலர்

  லைஃப்ஸ்டைல்

  குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் சாக்லேட்
  X

  குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் சாக்லேட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். மேலும் இதை செய்வதற்கு 10 நிமிடம் போதும். இந்த ஹாட் சாக்லேட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
  தேவையான பொருட்கள் :

  பால் - 1 1/2 கப்
  சோள மாவு - 1/2 டீஸ்பூன்
  சாக்கோ சிப்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்
  சர்க்கரை - 1 டீஸ்பூன்
  ஹாட் சாக்லேட் பவுடர் - 1 டீஸ்பூன்,
  கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்  செய்முறை :

  * பாலில் சோள மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  * கலந்த பாலை வாணலியில் ஊற்றி சூடேற்றி, அத்துடன் சாக்கோ சிப்ஸ், சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

  * சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் ஹாட் சாக்லேட் பவுடர் மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

  * ஹாட்டான ஹாட் சாக்லேட் ரெடி!!!

  - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×