
அரை ஆரஞ்சு பழத்தின் தோல் - சிறிதளவு
தண்ணீர் - 1 1/2 கப்
இலவங்கப்பட்டை - 1/2 அங்குலம்
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வையுங்கள். இப்பொழுது ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் சேர்த்துக் 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி அதில் வெல்லம் சேர்த்து குடியுங்கள்.
இப்பொழுது சூப்பரான ஆரஞ்சு டீ தயாராகி விட்டது.